இடுகைகள்
காகத்தின் கோபம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காகத்தின் கோபம் "சாமி...உடுமலைப்பேட்டையில் இருந்து தேவராஜ் பேசுறேன்" "ம் ம்.சொல்லுப்பா" "நேத்து சொன்னபடி நாங்க பேரூர்க்கு காலையிலே 11.30 12மணிக்கு அப்பாவிற்கு திதி கொடுக்க வந்துடரோம்.. சாமி நாங்க ஏதும் வரும்போது வாங்கிட்டு வரணுமா"..பவ்யமாக கேட்டார் தேவராஜ். "காலையில 11 மணிக்குள்ளே வந்துடுங்கோ...ஏறுபொழுதுலே செய்யறது அவ்வளவு சிறப்பில்லை...ம் வரும்போது.. 6 எலுமிச்சம்பழம் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க.. இங்க வேணுங்கறது எல்லாம் நான் வாங்கி வச்சுடறேன்"....புரோகிதர் விளக்கமாக ச் சொன்னார். "சரி சாமி 11 மணிக்குள்ளே வந்துடறோம் "என்று சொன்ன தேவராஜ் அதன் பின்பு தான் மனைவியையும் அம்மாவையும் துரிதப்படுத்தனார். நின்று நிதானமாக இருந்த இருவரும் அவசர அவசரமாகக் குளித்து மூவரும் காரில் ஏறி 9.00 மணியளவில்தான் வீட்டிலிருந்து புறப்பட முடிந்தது.வழக்கத்தை விடவும் கூடுதல் வேகத்தில் காரை ஓட்டியும் கிணத்துக்கடவு நெருங்கும்போதே 10 மணிக்கு மேலாகிவிட்டது.நல்ல வேளை தேவகி வழியில் எலுமிச்சம்பழம் வாங்க நினைவுபடுத்த காய்கறி மார்க்கெட்டுக்கும் தள்...
ஈரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஈரம் வள்ளி..வள்ளீ.... குளியலறையில் நுழைந்த முத்தய்யா இனியும் அவசரமாய் ஷவரில் முழுதும் நனைந்து சோப்புக்காக தேடியபோதுதான் சோப்பு எடுக்க மறந்ததை உணர்ந்தார். ஓடுகிற மிக்ஸி சத்தத்தில் அடுக்களையில் வேலையாய் இருந்த வள்ளியம்மைக்கு கேட்குமா? ஏய் வள்ளி ...ஏய்...இனியும் சற்று குரலெடுத்து கத்தினார் முத்தய்யா.. மிக்ஸியின் சத்தம் ஓய தரையில் கீழ் அமர்ந்து வெங்காயம் அரிந்துகொண்டிருந்த வள்ளியம்மை ஏனுங்க கூப்பிட்டீங்களா என்றார். கூப்பிட்டனா..கூப்பாடே போட்டுட்டேன் பாத்ரூமிலிருந்து கூப்பிட்டா இங்க கேக்கவா செய்யும்..அதுவும் மிக்ஸி வேற ஓடுச்சு சரிசரி என்ன வேணும் சொல்லுங்க... பக்கத்து ரூம் அலமாரி கீழ்தட்டில சோப்பு இருக்கு..சீக்கிரமா எடுத்துட்டு வா ...ஏங்க எனக்குதான் உடம்புக்கு முடியலே..உக்காந்தா நிமிர முடியலே நிமிர்ந்தா நிக்க முடியல .மூட்டு வலி முழங்கால் வலின்னு நான் பட்ற கஷ்டம் உங்களுக்கு தெரியாதா... நானும் சமையல் வேலையாய் தானே இருக்கேன்..நீங்க தான் துண்டை கட்டிட்டு வந்து சோப்பு எடுத்துட்டு போகக்கூடாதா. என்றார் வள்ளியம்மை வள்ளியம்மைக்கும் வயது 60க்கும் மேல் தான் இருக...